கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மற்றும் கிணற்றில் இருந்த தண்ணீரில் திடீர் என தீப்பிடித்து எரிந்து வருவதை அடுத்து அந்த பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வாட்டத்துடன் இருப்பதாக தகவல் வெளியாக உள்ளன
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள அஞ்சாலுமுட்டி என்ற பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குடிநீர் கிணறுகளில் திடீரென தண்ணீர் தீப்பற்றி இருக்கிறது. பொதுவாக தீப்பற்றி எரிந்தால் அதை தண்ணீரை வைத்து தான் தீயை அணைக்க முடியும். ஆனால் தண்ணீரிலே தீப்பற்றி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
இது குறித்த தகவல் தெரிந்தவுடன் அரசு அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று குடிநீர் கிணறுகளில் பெட்ரோல் கசிந்து உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும் உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.