கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் இருப்பினும் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பு இல்லை என்றே கூறி வருகிறது
இந்த நிலையில் மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வாய்ப்பே இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு முடிவுகள் காணாமல் உள்ள நிலையில் செய்தியாளர்களை இன்று நரேந்திர சிங் தோமர் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இடைத்தரகர்களை பார்த்து பயம் இல்லை என்றும் விவசாயிகளின் நலன் மட்டுமே முக்கியம் என்றும் எனவே விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்