சாம்சங் ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லை என்று பயனாளிகள் சமூக வலைதளங்கள் மூலம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் தான் ஏராளமான பயனாளிகள் வைத்திருக்கிறார்கள் என்றும் இந்நிறுவனத்தின் புதிய புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் அவ்வப்போது மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாம்சங் ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பாக pdf பைல்களை டவுன்லோட் செய்ய முயன்றால் டவுன்லோட் செய்ய இயலாது பின்னர் முயற்சிக்கவும் என்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் சாம்சங் ஸ்மார்ட் போன் பயனாளிகள் புகார் அளித்துள்ளனர்
இந்த புகார் குறித்து வாட்ஸ்அப் மற்றும் சாம்சங் நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றாலும் இது ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும் டெக்னிக்கல் பிரச்சனை என்றும் விரைவில் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தரப்பில் கூறியிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இந்த பிரச்சினையை பலர் சந்தித்து வருவதாக சமூக வளாகங்களில் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.