Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 வருட பகை: சிதம்பரத்தை பழிதீர்க்க காத்திருக்கும் அமித் ஷா!!

Advertiesment
Amit shah
, புதன், 21 ஆகஸ்ட் 2019 (16:01 IST)
உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா தன்னுடையை 10 வருட பகையை தீர்க்க ப.சிதம்பரத்தை கைது செய்ய அவரசப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. 
 
ப.சிதம்பரம் மீதான ஐ.எம்.எக்ஸ் மீடியா வழக்க்கில் அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவசரம் காட்டி வருகிறது. ஏன் இந்த அவசரம் என பல காரணங்கள் முன்வைக்கப்படும் நிலையில் அதில் ஒரு முக்கிய காரணமாக அமித்ஷாவின் பழைய நிகழ்வு ஒன்றும் அடிப்படுகிறது. 
 
ஆம், கடந்த 2005 ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நபர் பாக். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக குஜராத் காவல்துறை தெரிவித்தது. மேலும், இந்த வழக்கிற்கு சாட்சியாக இருந்த துளசிராம் என்பவரும் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 
Amit shah
இந்த இரண்டு என்கவுண்டர்களும் போலியானைவை என்றும் இதற்கும் அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. 
 
இதனைதொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அமித்ஷா கைது செய்யப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்து 3 மாதம் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் அமித்ஷா
Amit shah
எனவே இதை மனதில் வைத்து தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ-க்கு அழுத்தம் தர வாய்ப்புகள் உள்ளது என அரசல் புரசலாக பேசப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக் டாக்கால் அப்பாவான 16 வயது சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்