தற்போதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் 18 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் உலகத்தில் இரண்டாவது பிரபலமான அரசியல்வாதி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
நரேந்திர மோடியை இந்தியாவின் பிரபலமான பிரதமர் என்று குறிப்பிடலாமா? தற்போதைய நவீன உலகில் அனைவரும் இணையதளம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அரசு காரியங்கள் மட்டும் திட்டம் தொடர்பான விவரங்கள் எளிதாக மக்களை சென்று சேர்கிறது. மேலும் நரேந்திர மோடி விளம்பரம் செய்வதற்கே ஒரு பெரிய தொகையை ஒதுக்குகிறார்.
விளம்பரம் செய்வதன் மூலம் எளிதாக மக்களை சென்றடையலாம். இருந்தாலும் இந்தியா முழுவதும் பாஜக-வின் கை ஓங்கியுள்ளது. இத்தனை காலம் இல்லாமல் மோடி பதவியேற்ற பின் பாஜக இந்தியாவில் வலிமையாக உள்ளது.
உதாரணம் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி வெகு காலத்துக்கு பிறகு தற்போது அமைந்துள்ளது. மோடியின் பண மதிப்பிழப்பு உலக நாடுகளை ஆச்சரியம் அடைய செய்தது. எப்படி ஒரு வளரும் நாடு இப்படி ஒரு தைரியமான முடிவை எடுக்க முடியும் என உலக நாடுகள் அச்சரியம் அடைந்தனர்.
தற்போது 18% சதவீத ஜிஎஸ்டி வரி. உலகிலே இந்தியாவில் தான் அதிக வரி. இப்படி மோடியின் ஒவ்வொரு அசைவும் அவரை பிரபலமாக்கியது. அவரது அதிரடி முடிவுகள் அவருக்கான கூட்டத்தை அதிகரித்தது.
இதன் மூலம் மோடி தற்போது பிரபலமான பிரதமராக உள்ளார். ஒருவேளை நேரு, இந்திரா காந்தி காலத்தில் இந்த சமூக வலைத்தளங்கள் இருந்திருந்தால் அவர்களும் மோடி போல் பிரபலமாக திகழ்த்து இருப்பார்களா? இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பெருமை நேருவுக்குதான் உண்டு.
இந்திரா காந்தி தைரியமாக அதிரடியான முடிவுகளை எடுக்கக்கூடிய பெண். மொரார்ஜி தேசாய் இந்தியாவின் சிறந்த பிரதமர். பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்த நினைத்த பிரதமர். இருந்தும் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்தியாவுக்கு அவரது முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்திய உளவுத்துறை RAW அமைப்பை கட்டமைத்தலில் இந்திரா காந்திக்கு பெரும் பங்கு உண்டு. காஸ்கிரஸ் ஆட்சியில் செய்ல்படுத்த நினைத்த திட்டங்களை மோடி அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. ஆதார் முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்ட ஒன்று.
தற்போது இந்தியாவில் தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டையும் வைத்தே பாஜக வலிமை அடைந்துள்ளது. மேலும் முக்கியமாக கருப்பு பணம் ஒழிப்பு என்ற போர்வையில் இந்தியாவை போர்த்தியுள்ளது மோடி அரசு.