Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஞ்சய்தத்தை விடுதலை செய்தது யார்? ஆர்டிஐ கொடுத்த அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (09:08 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்த நிலையில் தண்டனைக்காலம் முடியும் முன்னரே நன்னடைத்தை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
 
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் 'தண்டனைக்காலத்திற்கு முன்னரே சஞ்சய்தத்தை விடுதலை செய்தது யார்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
 
பேரறிவாளனின் இந்த கேள்விக்கு தற்போது ஆர்.டி.ஐ பதில் கூறியுள்ளது. சஞ்சய்தத்தை விடுதலை செய்தது மகாராஷ்டிர மாநில அரசுதான் என்றும், சஞ்சய்தத்தை விடுதலை செய்ய மத்திய அரசு நிராகரித்த 55 நாட்களில் மாநில அரசு சஞ்சய் தத்தை விடுவித்துள்ளது என்றும் பதில் கூறியுள்ளது.
 
அதேபோல் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதிக்காவிட்டாலும் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்பதே பேரறிவாளனின் வாதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆர்.டி.ஐயின் இந்த தகவலை அடுத்து பேரறிவாளனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments