Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வெட்டுக்கிளிகள் அதிகம் படையெடுத்து வந்தது ஏன் ? மத்திய அரசு விளக்கம்!

வெட்டுக்கிளிகள் அதிகம் படையெடுத்து வந்தது ஏன் ? மத்திய அரசு விளக்கம்!
, புதன், 27 மே 2020 (22:36 IST)
இந்தியாவின் மேற்குப் பகுதியில் வெட்டுக் கிளிகள் பெருமளவில் பயிர்களை நாசம் செய்துவரும் நிலையில், அந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டிற்கு இல்லையென தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று.

2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

ஆனால், வெட்டுக்கிளி படையெடுப்பைப் பொறுத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கமென்றும் தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம்வரை வந்ததில்லையென்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பற்றி மத்திய அரசு முதன்முறை விளக்கம் அளித்துள்ளது., அதில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் வரும்.

ஆனால் கடந்த ஆண்டு பாகிஸ்தான் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்தாததால் இந்தாண்டு முன்னதாகவே வெட்டுக்கிளி இந்தியாவில் படையெடுத்துள்ளது என  மத்திய விவசாயத்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்… ஸ்டாலின்