குடகில் உள்ள குடியிருப்பு பகுதியில் 12 அடி நீள நாகப்பாம்பு பிடிப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடகு மலை பகுதியில் உள்ள வஜ்ரப்பேட்டை குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள மரத்தில் பாம்பு ஒன்று உள்ளதாக காணுயிர் மீட்பு அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த அவர்கள் மரத்தை ஆராய்ந்த போது 12 அடி நீள நாகப்பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்துள்ளது. அதை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மைதானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
12 அடி பெரிய பாம்பை காணுயிர் ஆர்வலர் லாவகமாய் கையாளும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.