Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நபருக்கு ரூ.52 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (08:40 IST)
ஒரே நபருக்கு ரூ.52 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்த ஊழியர்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட போதிலும் நேற்று முதல் ஒரு சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் மது கடைகள் திறந்தவுடன் ஆயிரக்கணக்கானோர் மதுக்கடைகள் முன்  நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்
 
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி இரு பாலர்களும் கொளுத்தும் வெயிலிலும் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு கடையில் ஒரே ஒரு நபர் மட்டும் 52 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த பில் சமூக வலைதளங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து சில்லரை கடையில் மொத்தமாக விற்பனை செய்தது குற்றம் என்று சம்பந்தப்பட்ட கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 52 ஆயிரத்துக்கு மது வாங்கியவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூபாய் 45 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments