45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தாஜ்மஹாலின் வெளிப்புற சுவரை யமுனா நதி நீர் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
யமுனா நதியில் அதிக அளவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக யமுனா நதியில் உள்ள தண்ணீர் தாஜ் மஹாலின் வெளிப்புற சுவரை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இருப்பினும் தாஜ்மஹால் உள்ளே தண்ணீர் வர வாய்ப்பு இல்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.