கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் குமாரசாமி சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீது 6 நாட்கள் நடந்த விவாதத்திற்கு பின்னர் 99 வாக்குகளை பெற்று அரசு கவிழ்ந்து. இதனிடையில் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ இருவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
இந்நிலையில், 105 இடங்களை பெரும்பான்மையக கொண்ட பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என எடியூரப்பா ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். ஆளுநரும் பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா 4வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.