இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் அவ்வாறாக செய்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்த நிலையில் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் “உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளதாக செய்தி பரப்பினால் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.