சமீபத்தில் திருமணத்திற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கூறிய நிலையில் லவ் ஜிகாதிற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக முதல் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து ஆணை மணப்பதற்காக ஒரு மாதம் முன்னதாக மதம் மாறியுள்ளார். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி பேசியுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் “மாநிலத்தில் இந்து பெண்களை பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடுமையான சட்டம் விரைவில் இயற்றப்படும். எங்கள் சகோதரிகளின் மாண்பையும், பெருமையும் குலைக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் பெண்களுக்கு இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.