உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக முதல்வர் யோகி அதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் பல போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பல அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ”ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை. பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை இனியும் பார்த்து கொண்டு இருக்க முடியாது. உத்தர பிரதேச அரசு கண்டிப்பாக இந்த வன்முறைக்கு பதிலடி கொடுக்கும்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்த வீடியோக்கள் உள்ளன. அவர்களை கண்டறிந்து அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த சொத்துக்கள் விற்கப்பட்டு அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஈடு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்தின் இந்த திடீர் முடிவு உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.