Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாதுராம் கோட்சேவுக்கு பாரத ரத்னா கொடுங்கள்!: நக்கலடிக்கும் காங்கிரஸ்

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (12:16 IST)
மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பாஜக அறிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் இந்து மகா சபையை தோற்றுவித்தவர் சாவர்க்கர். விடுதலை போராட்ட காலத்தில் அந்தமான் சிறையிலடைக்கப்பட்ட இவர், காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர் நிரபராதி என பின்னர் விடுவிக்கப்பட்டவர். மஹாராஷ்டிராவில் சாவர்க்கருக்கு இன்னமும் பெரிய மதிப்பு இருக்கிறது. அவருக்கு பாரத ரத்னா அறிவிப்பதன் மூலம் பல வாக்குகளை பெற முடியும் என பாஜக வியூகம் வகுத்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் இந்த பாரத ரத்னா வழங்கும் நிலைபாட்டை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட ஒருவருக்கு காந்தியின் 150வது பிறந்தநாள் ஆண்டிலேயே பாரத ரத்னா வழங்குவது எவ்வளவு பெரிய முரண் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி ”காந்தியை கொல்ல சதி செய்ததாக மட்டுமே சாவர்க்கர் மீது வழக்கு இருந்தது. ஆனால் நாதுராம் கோட்சேவோ காந்தியை கொன்றவர். எனவே சாவர்க்கருக்கு பதிலாக கோட்சேவுக்குதான் பாரத ரத்னா அளிக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

மனீஷ் திவாரி கூறியது காந்தியை கொல்ல முயற்சித்தவருக்கு விருது கொடுப்பதை விட கொன்றவருக்கு கொடுங்கள் என்று பாஜகவை கிண்டலடிக்கும் தோனியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments