குஜராத்தை சேர்ந்த சிறுமியை, ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவரை நிர்வாணப்படுத்தி தாக்குல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாத் பார்வத்வா பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி, மகளிர் தினமான கடந்த 8ம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மளிகைக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமியின் பழைய நண்பனான ஜபின் பனோ பதான் என்பவன் பேச்சு கொடுத்துள்ளான். முன்பு போல் தன்னிடம் ஏன் பேசுவதில்லை என அவன், அந்த சிறுமிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. அதன் பின் அவர் அங்கிருந்து சென்று விட்டான்.
இந்த தகவலை, ஜபின் தனது தந்தையும் ரவுடியுமான பிரோஸ் கானிடம் கூறியுள்ளார். அந்நிலையில், பிரோஸ் கான், அந்த சிறுமிற்கு போன் செய்து இதுபற்றி விசாரிக்க தனது வீட்டிற்கு வர வேண்டும் என மிரட்டியுள்ளான். ஆனால் அந்த சிறுமி அவர்களின் வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரோஸ் கான், தனது மகன்கள் மற்றும் சகோதரர்களோடு அன்றிரவு 9 மணியளவில் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற கதவை தட்டியுள்ளனார். ஆனால், அந்த சிறுமியின் பெற்றோர்கள் கதவை திறக்கவில்லை. எனவே கோபமடைந்த அவர்கள் கதவை உடைத்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஒரு ஆட்டோவில் இழுத்து சென்று, அருகில் இருந்து ஒரு மைதானத்திற்கு சென்றனர். அங்கு பலரின் முன்னிலையில் அப்பெண்ணின் உடைகளை கிழித்து நிர்வாணமாக்கியதோடு, பிறப்புறுப்பில் காயம் ஏற்படுத்தினர்.
இதனால் அந்த சிறுமி மயங்கி விட்டாள். அவர் இறந்து விட்டார் என அங்கிருந்தவர்கள் கூறிய பின்பே அங்கிருந்து சென்றுள்ளனர். இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த சிறுமியின் பெற்றோர்களை மிரட்டியுள்ளனர். எனவே, அந்த சிறுமியின் குடும்பத்தினர் அருகிலிருந்த ஜுகாபூர் எனும் பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இந்த சம்பவம், எப்படியோ ஒரு சமூக ஆர்வலருக்கு தெரிய வர குழந்தைகள் உதவி மையத்திடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிறுமியிடம் புகார் பெற்ற குழந்தைகள் அமைப்பு, இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தது.
இதையடுத்து, ரவுடி பிரோஸ்கான், அவரது 2 மகன்கள் மற்றும் சகோதரர்கள் ஆகியோரின் மீது குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.