Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

Advertiesment
ஜோதி மல்ஹோத்ரா

Mahendran

, ஞாயிறு, 18 மே 2025 (13:24 IST)
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் வழங்கியதாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியாணாவைச் சேர்ந்த இவர், 1.37 லட்சம் பேரால் யூடியூபில் பின்தொடரப்பட்டவராகவும் இருக்கிறார்.
 
'டிராவல்' விடியோக்கள் எடுத்து பதிவிடும் யூடியூபராகவே ஜோதி மல்ஹோத்ரா பரவலாக அறியப்பட்டவர். ஆனால், வெளியில் சுற்றியதற்குள், இவர் பாகிஸ்தானுடனும் தீவிர தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
 
இவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் மூலமாக அந்நாட்டு உளவுத்துறையுடன் இணைந்துள்ளார். வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்னாப்சாட் போன்ற செயலிகள் மூலம் பாகிஸ்தானில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றும், அந்த எண்கள் ஹிந்து பெயர்களில் சேமிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
ஜனவரி மாதம் பஹல்காம் பயணித்த ஜோதி, அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்றதும் சந்தேகத்தை தூண்டியுள்ளது. தற்போது, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் மற்றும் BNS பிரிவுகளின் கீழ் அவரது மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
ஜோதியுடன் மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறையின் “சிந்தூர் ஆபரேஷன்” மூலம் இவர்கள் பிடிபட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!