இதெல்லாம் ஒரு தேசிய பிரச்சனையா? ஜொமைட்டோ உரிமையாளரின் சர்ச்சைக்கருத்து!
வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ ஒருவர் அறியாமல் செய்த தவறு ஒரு தேசிய பிரச்சினையாக மாறி இருக்கிறது என தொண்டு நிறுவனத்தின் நிறுவன அதிபர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
இந்த ஒரே ஒரு காரணத்திற்காக அவரை பணியில் இருந்து விடுவிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவரை நாங்கள் மீண்டும் இணைத்து உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் இருந்து நாம் பாடம் கற்று கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் இது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்
எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரிவோர் பெரும்பாலும் இளைஞர்கள் என்றும் பிராந்திய மக்களின் உணர்வுகளையும் மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல என்றும் நானும் அப்படித்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நான் மற்றவர்களுடைய குறைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு நாங்கள் உங்களை நேசிக்கிறேன் என்றும் நாட்டை நேசிப்போம் இப்போது உங்களை நேசிக்கிறோம் என்றும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அல்ல என்றும் நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்