Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களும் அற்புத மருத்துவ பயன்களை கொண்ட வேப்பமரம்...!!

Webdunia
மாதம் ஒரு முறை வேப்பம்பூ ரசம், துவையல் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக சித்திரை மாதம் துவங்கும் சமயம் அதிகளவில் வேப்பம் பூக்களை மரத்தில் காணலாம்.
வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து  வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
 
சர்க்கரைவியாதியை கட்டுக்குள் கொண்டுவர தினமும் வேப்பங்க்காயை சாப்பிட்டு வாருங்கள். மாத்திரையின்றி கட்டுக்குள் கொண்டு வரலாம்.
 
வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரையை சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தீராத தொழுநோய் முதலான அனைத்து சரும வியாதிகளும் குணம்டையும்.
 
வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு அதனை நன்கு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் பரு, கரும் புள்ளிகள் ஆகிய அனைத்தும் நீங்கும். வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.
 
அம்மை நோய் வந்தவர்கள் வேப்பிலையை கீழே போட்டு அதன் மேல் படுத்துக்கொள்வது நல்லது. மேலும் வேப்பிலை அல்லது  இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால், நோய் விரைவில் குணமாகும்.
 
காய்ந்த வேப்பம்பூ தூளை 4 சிட்டிகை எடுத்து இஞ்சிச் சாறில் கலந்து சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய ஏப்பம் குணமாகும்.
 
வேப்பம்பூ தூள் 4 சிட்டிகை அளவு எடுத்து, 2 சிட்டிகை பெருங்காயத்தூளுடன் சேர்த்து வெந்நீரில் கரைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை  விலகும்.
 
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments