கற்றாழை தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது. கற்றாழையில் கூந்தலுக்கு தேவையான 1௦௦ விதமான சத்துக்கள் உள்ளன.
கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை மென்மையாக பட்டு போன்று மாற்றும். மேலும் இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு அழகான அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்: 1 கற்றாழை தண்டு சிறிது, தேங்காய் எண்ணெய்.
செய்முறை: தண்டை இரண்டு பகுதிகளாக வெட்டி, கற்றாழை ஜெல்லை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். இந்த கற்றாழை ஜெல்லின் அரை கப் தேங்காய் எண்ணெய்யுடன் கலக்கவும். கற்றாழை தேங்காய் எண்ணெயின் விகிதம் 1:1 ஆக இருக்க வேண்டும்.
இந்த கலவையை மிதமான சூட்டில் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை சூடாக்கவும். அடுப்பை அணைத்து விட்டு குளிர்விக்கவும். கலவையை ஒரு இருண்ட பாட்டில் ஊற்றி, பயன்படுத்துவதற்கு முன்பு சுமார் 2 வாரங்களுக்கு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
நன்மைகள்: இந்த வீட்டில் செய்த கற்றாழை தேங்காய் எண்ணெய் பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கு இது ஒரு சிறந்த எண்ணெய். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, பலவீனமான முடியை பலப்படுத்துகிறது. இது முடியை வலுவூட்டி, தலை முடி மற்றும் ஸ்கேல்ப் pH அளவை சமநிலையில் வைத்திருக்கும்.