ஆடாதோடை செடியானது மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை தடுக்கக்கூடியது. மார்பு சளியை கரைத்து வெளியேற்றும். இருமலை தடுக்கும், காய்ச்சலை குணமாக்கும்.
காய்ச்சலை குணமாக்கக்கூடிய மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, மஞ்சள் மற்றும் தேன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு, கால் டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் ஆடாதோடை இலையின் சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த கசாயத்தை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தக்கூடிய மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, மஞ்சள் மற்றும் தேன்.
செய்முறை: 2 டீஸ்பூன் ஆடாதோடை இலையின் சாறுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து குடித்துவந்தால் மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும்.
இருமல் சளி போன்றவற்றிருக்கான மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள் : ஆடாதோடை இலை, மிளகு தூள், இஞ்சி மற்றும் தேன்.
செய்முறை: பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் ஆடாதோடா இலை சாறு சேர்த்து, அத்துடன் மிளகுப் பொடி, இஞ்சி நறுக்கியது சிறிதளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.