ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில் உள்ள முழுசத்தும் நமக்கு கிடைக்கிறது.
அரிசியின் வகைகளுக்கு தகுந்தார் போல அவலும் மாறுபடும். உதாரணமாக சிகப்பு அரிசியில் இருந்து சிகப்பு அவல், வெள்ளை அரிசியில் இருந்து வெள்ளை அவல் தயாரிக்கின்றார்கள். தற்போது பாரம்பரிய அரிசி வகைகளில் இருந்து அவல் தயாரிக்கின்றனர். வரகு, சாமை போன்ற சிறுதானியங்களில் இருந்தும் அவல் தயார் செய்கின்றனர்.
அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.
வெறும் அவலை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். காலை சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்லது. சமையல் செய்வது போல வேக வைத்து தாளித்து சாப்பிடுகின்றனர். பாலில் கலந்தும் சாப்பிடுகின்றனர்.
வெறும் அவலுடன் வெல்லம் கலந்து சாப்பிடலாம் அதுவும் நல்ல சுவையாக இருக்கும்.