வீடுகளிலும் பூங்காக்களிலும் பசுமைப் புத்துணர்வு அளிக்க இம்மூலிகை வளர்க்கபடுகிறது. இந்தச் செடி இருக்கும் இடத்தில், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது என்பதுடன் ஈக்களும் அணுகாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது.
சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும். அருவதா மூலிகை முதுகு தண்டுவட வலி மற்றும் முதுகு வலி ஆகிய பாதிப்புகளை குணமாக்கும். அருவதா மூலிகையின் இலைகள் உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து, எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் பெற்றது.
சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளை குணப்படுத்தும்:
சதாப்பு இலைகள் எனும் அருவதாவின் இலைகள், மூட்டு வலிகளை குணப்படுத்தும் தன்மைமிக்கது. மன அழுத்த பாதிப்புகளால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி, இரத்தத்தை தூய்மைப்படுத்தி, வயிற்றுப் புழுக்களை அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடலில் சூட்டினால் ஏற்படும் வாயுவை விலக்கி, அதனால் ஏற்பட்ட வாத உடல் வலி, வயிற்று வலி மற்றும் வேதனைகளைப் போக்கும் தன்மை மிக்கது.
சுளுக்கு, தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும். உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு அருவதா மூலிகை தீர்வாக அமைகிறது.
அருவதா மூலிகை மூல வியாதிகளை சரிசெய்யும். அருவதா மூலிகை உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது.