Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நாவல் பழத்தின் அற்புத மருத்துவ நன்மைகள் !!

நாவல் பழத்தின் அற்புத மருத்துவ நன்மைகள் !!
நாவல் மரத்தின் இலை, விதை, பட்டை மற்றும் பழம் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இளமை தோற்றத்தை பாதுகாக்க விரும்புவோர்கள் நாவல் பழத்தினை அதிகம் சாப்பிடலாம்.

புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றல் நாவல் பழத்திற்கு உண்டு. இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நாவல் பழம் சிறந்த தீர்வாக இருக்கும்.
 
நாவல் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்திருக்கிறது. இதனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவாக விளங்குகின்றது. இந்த நாவல் பழத்தில் குறைந்த அளவு கலோரியும் அதிகமான நார்ச்சத்துக்கள், விட்டமின்-சி, விட்டமின்-கே மற்றும் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. இவை உடலுக்கு ஆரோக்கியமாக  இருக்கும்.
 
இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு முக்கிய இடமுண்டு. நாவல் பழம் மூளையின் தொழிற்பாட்டை அதிகரிக்க உதவுவதுடன் ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது.
 
நாவல் பழத்தில் இனிப்பின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் நீரழிவு நோய் உள்ளவர்களும் எந்த விட பிரச்சனையும் இல்லாமல் சாப்பிடலாம். சிறுநீர் தொற்று நோய்கள் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் இந்த நோய்களில் இருந்து விடுபடலாம்.
 
தசைகள் பாதிப்படைவதை நாவல் பழம் தடுக்கின்றது. நாவல் பழத்தில் அதிகளவு நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலசிக்கல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நாவல் பழம் நல்ல தீர்வாக இருக்கும்.
 
நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை தூண்டுவதில் நாவல் பழம் சிறந்து விளங்குகின்றது. நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக மற்றும் வெறும் வயிற்றில் உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல் கூச்சத்தை போக்குவதற்கான சில எளிய வழிகள் !!