Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை பயன்கள் நிறைந்துள்ளதா பச்சைமிளகாயில்...?

Webdunia
உடலில் கொழுப்பைக் குறைக்கும் பணியை செய்யும் பச்சைமிளகாயில் உள்ள வைட்டமின்கள் A, B, C ஆகியவை நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து, நோய் தொற்றில் இருந்து காக்கின்றன.

ஜீரணத்தைத் தூண்டும், நார்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதால், இரைப்பையை சுத்தம் செய்து, மலச்சிக்கலை நீக்குகிறது. நீரழிவுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவில், பச்சைமிளகாயை சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
 
ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது பச்சை மிளகாயில் உள்ள இரும்புச்சத்து, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவி, ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது. இதன் மூலம் ரத்த சோகையில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
 
கண் ஆரோக்கியம் இதில் இடம்பெற்றுள்ள பீட்டா கரோட்டீன் கண்களுக்கு ஆரோக்கியத்தையும் நல்ல பார்வையையும் தருகிறது. பச்சைமிளகாயில் உள்ள  சிலிக்கான்கள் தலையில் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
 
இத்தனை பலன்தரும் பச்சைமிளகாயை அளவுக்கு அதிகமாக உணவில் எடுத்துக்கொண்டால், வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற நோய்கள் வரும் என்பதையும் நாம்  அனைவரும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments