Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் வாழைப்பழம் !!

Webdunia
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய்  அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான  வளர்ச்சிக்கு நல்லது.
 
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று  பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
 
பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
 
பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.
 
மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.
 
ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
 
பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
 
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது.
 
நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
 
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments