பீன்ஸ் காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள அது இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். பீன்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிகிறது.
பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.
நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒருநாளுக்குத் தேவையான ஃபோவேட் சத்துக்களைத் தரும். வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.