பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவுகிறது. மேலும் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
பாற்காயையோ, அதன் இலைகளையோ போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால் வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தினமும் பாகற்காயை சரியான அளவில் சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு குறையும். தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்னைகள் நீங்கும். தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பாகற்காய் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
பாகற்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.