Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி உணவில் புதினாவை சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:07 IST)
புதினாவை  அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பலவித நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயு கோளாறுகள், வயிற்றுப்போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.

புதினாக்கீரையைச் சுத்தமாக்கி கஷாயமாக்கிக் கொண்டு, அதில் சிறிது உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். இந்தக் கஷாயத்தினால் தினசரி வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் இனிமையான குரல் வளத்தைப் பெறலாம்.

கீரிப்பூச்சிகள் குடலில் சேர்ந்து தொந்தரவு கொடுத்தால் உடனடியாக புதினா இலையைக் கொண்டு வந்து கஷாயம் செய்து இரண்டு வேளைகள் வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும். குடலிலுள்ள கீரிப்பூச்சிகள் வெளியே வந்துவிடும்.

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாக இருந்தாலும் பதினாக் கீரையைப் பச்சையாக மென்று சாப்பிடவும். அல்லது பதினாக் கீரையை நன்கு உலர்த்தி தூளாக்கிக் கொண்டு இத்தூளினால் தினசரி பல் துலக்கி வரவும்.

இதுபோன்று செய்வதனால் பல் ஈறுகளில் உண்டாகும் கோணறு முதல் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதுடன் மேற்கொண்டு பற்களில் உண்டாகும் நோய்கள் வராமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments