Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவகுணம் நிறைந்த இந்த டீயை குடிப்பதால் உண்டாகும் பயன்கள் !!

Webdunia
இஞ்சி, மஞ்சள் டீ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், விரைவாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சியும், மஞ்சளும் நமது சமையல் அறையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

மஞ்சள் டீ தயாரிக்கும் முறை: 2 தேக்கரண்டி - மஞ்சள் பொடி (10 கிராம்), 2 தேக்கரண்டி - இஞ்சி (30 கிராம்), 1 ஸ்பூன் - தேன் (25 கிராம்), 2 கப் - தண்ணீர் (500 மிலி). 
 
தயாரிக்கும் முறை:  இஞ்சியை தோல் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். தண்ணீரை சுட வைத்து அதில் அந்த இஞ்சியை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக கலக்கி வைத்துகொள்ளவும். 
 
இந்த திரவத்தை ஒரு கப்-ல் இட்டு மஞ்சள் பொடி சேர்க்கவும். அத்துடன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். உங்களுக்கு எலுமிச்சை சுவைபிடிக்கும் என்றால் இதில் சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.
 
ஒரு நாளின் எந்த நேரத்திலும், நீங்கள் வெறும் வயிற்றில் இந்த டீயை குடிப்பது நல்லது. நீங்கள் உடற்பயிற்சியின் போது குடிக்கலாம். இந்த டீயை, குடிநீரை போல்,  ஏன் அதைவிட அதிகமாகவே குடிக்கலாம்.
 
பலன்கள்: 
 
மஞ்சள் புதிதாக கொழுப்பு செல்கள் உருவாவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும், எல்.டி.ல் எனப்படும் கெட்ட கொழுப்பையும், ட்ரை கிளேசிரைட்களையும் குறைக்க உதவுகிறது.
 
மஞ்சள் டீ வயிற்றில் சுரக்கும் பித்த நீர் அளவை அதிகரிக்க உதவும். பித்த நீர் என்பது கொழுப்பை கரைக்கவல்ல திரவம். அதனால் நம் உடல் எடைகுறைய  உதவும். 
 
மஞ்சள் டீ உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால், வீக்கங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது.
 
கல்லீரலின் எல்லா செல்களையும் பாதுகாத்து கல்லீரலை நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் உங்களுக்கு பித்தபை கற்கள் பிரச்சனை இருந்தால் இந்த டீ  நல்ல தீர்வாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments