வேர்க்கடலையில் பயோட்டின், ஃபோலேட், வைட்டமின் ஈ, மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வேர்க்கடலை ஒருவரது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க வல்லது.
குடல் புற்றுநோய்க்கு வேர்க்கடலை தீர்வளிக்கின்றது. வேர்க் கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. வேர்க் கடலையில் உள்ள பீட்டா கோமரிக் அமிலமானது நச்சுப் பொருள் குடலில் உருவாவதை தடை செய்கின்றது. இதனால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
வாரம் இரண்டு முறை வேர்க் கடலையை சாப்பிடுவதால் இருபத்தி ஐந்து முதல் ஐம்பத்தி எட்டு சதவீதம் வரை புற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வேர்க் கடலையில் உள்ள சர்க்கரை அளவு இரத்தத்தில் மிகக்குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் தாதுப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோன் அளவை துரிதப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது.
ஊட்டச்சத்து குறைவு, மற்றும் உடலில் சுரக்கின்ற ஹார்மோன்களின் சீரற்ற தன்மை போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. நிலக்கடலையில் வைட்டமின் பி சத்து வகையைச் சேர்ந்த பயோட்டின் எனப்படும் வேதிப்பொருள் இருக்கின்றது.
வேர்க் கடலையினை உண்ணும் பொழுது, அதிலுள்ள நிறைவுறா கொழுப்புகள், உடலில் கொழுப்பு சேர்வதை தடை செய்கின்றது. கொழுப்புகள் உடலில் சேர்வது தடை செய்யப்படுவதால் பித்தநீர் கட்டி உருவாக்கம் தடுக்கப் படுகிறது. இதைத்தவிர வேர்க் கடலை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைகிறது.