Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

Webdunia
சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது. 

சரும சுருக்கங்கள் நீங்க சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். 
 
கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள  வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. 
 
ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. 
 
சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது. 
 
மலச்சிக்கல் நீங்க சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து  பாதுகாக்கிறது. 
 
சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments