கொழுப்பில்லாத உணவுகளை அறவே தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இதய நலம் மேம்படுத்துகிறது.
புரத சத்து அதிகம் நிறைந்த உடைத்த கடலை பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.
உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடைத்த கடலையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்குஉண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.
இப்பருப்புகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது.
உடைத்த கடலை பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும். பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல் சோர்வை போக்க இப்பருப்புகள் உதவுகின்றன.