Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் ஒரு லிச்சி பழம் தரும் பயன்கள் !!

Webdunia
லிச்சி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.


தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும். இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.
 
ஒவ்வொரு பழங்களிலும் பலவிதமான நல்ல குணநலன்கள் இருக்கிறது தேவையற்ற நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் பழங்கள் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
 
லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சி முதலிடத்தில் உள்ளது.
 
லிச்சி பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. லிச்சி பழத்தில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலத்தில் இதனை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
 
லிச்சி பழத்தில் தொப்பையை குறைக்க கூடிய காரணிகள் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். லிச்சி பழம் நம் வயிற்றுக்குள் உள்ள கெட்ட கிருமிகளை  அழிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments