Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ மூலிகையான அம்மான் பச்சரிசியின் பயன்கள் !!

Webdunia
அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. இது வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒருவித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.
 
அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும் மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.
 
தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு சுரக்காமல் இருக்கும். போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
 
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும். அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும்  வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும். அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
 
அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜலதோஷம், சளி பிரச்சனை ஏற்பட என்ன காரணம்?

வெட்டிவேர் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?

கீரைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

பற்கள் சொத்தையாவதற்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments