Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துத்தி இலையை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் !!

Webdunia
கீரை வகையைச் சேர்ந்த இந்த துத்தியில் கருந்துத்தி, சிறுதுத்தி, நிலத்துத்தி, இலைகள் துத்தி என பலவகை உண்டு.

துத்தி இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து காரமில்லாத சுத்தமான அம்மியில் மை போல அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தினசரி ஒரு மாதம் விடாமல் குடித்து வந்தால் மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 
வாயுவினால் ஏற்படும் சகல வியாதிகளுக்கும், இடுப்பு வலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ, பொரியலாகவோ செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் மேற்கண்ட வியாதிகள் குணமாகும்.
 
எலும்பு முறிவுக்கு இது சிறந்த பலனளிக்கும் மூலிகையாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் முதலில் எலும்பை ஒழுங்குபடுத்திக் கட்டவேண்டும். இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூசி அதன்மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகுவிரைவில் முறிந்த கலும்பு ஒன்று கூடி குணமாகும்.
 
குடற்புண்ணால் வேதனைப் படுகின்றவர்கள் துத்தி கஷாயத்தைச் சாப்பிட்டுக் குணமடையலாம். துத்தி இலையைக் கொண்டு வந்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி கஷாயம் தயார் செய்து கொள்ளவும். இதனை குடற்புண்ணால் பாதிக்கப்பட்டவர் தினசரி மூன்று வேளை சர்க்கரைக் கலந்து கஷாயத்தைக் குடித்து வந்தால் பூரணகுணம் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments