Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால் !!

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால் !!
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:55 IST)
குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொதுப்பது அவசியமாகும். எந்த முறையில் மகப்பேறு நடந்திருந்தாலும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டுவது நல்ல தொடக்கமாக குழந்தைக்கு அமையும்.

 

முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் அளவில் குறைவானது ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியில் மற்றும் அது தரும் ஆற்றலில் மிகுந்தது. தாயிடமிருந்து சீம்பால் உற்பத்தி 24 வாரம் கர்ப்பம்கடந்தபின் ஆரம்பிக்கிறது. உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள 24 வாரம் கடந்த சிசுவிற்கு சீம்பாலை கலந்து தரலாம். அதிகப் புரதம் கொழுப்பு எதிர்ப்புச் சத்து நிறைந்த திரவத்தங்கம் சீம்பால். உயிர்ப்பொருட்கள், திசுக்கள், நொதிகள் குடல் வளர்ச்சி ஊக்கிகள், எதிர்ப்பு சக்தி என பல உடனடி நோய்எதிர்ப்பிற்கு உதவுகின்றன.

முதல் மூன்று நாட்களுக்கு குழந்தைக்குத் தேவையான நீர்ச்சத்து மிகக்குறைவு எனவே குறைந்த அளவில் (பதினைந்திலிருந்து முப்பது மில்லி) சுரக்கும் சீம்பால் போதும்.

பிறகு சுரக்கும் தாய்ப்பாலை சத்துக்களின் தன்மை அடர்த்தி மற்றும் அளவு ஒவ்வொரு முறையும் மாறுபடும். தாகத்தை உடனே குறைக்க நீர் நிறைந்தும் பசியாற உடனடி லாக்டோஸ் சர்க்கரை மிகுந்தும் இருப்பது முன் பால் .இதை குடித்து விட்டு தூங்க தொடங்கினால் குழந்தையை எழுப்பி விட்டு பால் தருவதை தொடரவேண்டும். தாகமும் பசியும் மட்டுப் பட்டபின் குடிக்கும் போது சுரக்கும் பின்பாலில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் இவை ஆற்றலையும் உடல் வளர்ச்சியையும் திசுக்களின் பிரிதல் முதிர்தலையும் மேம்படுத்தும்.

பேரழிவு பேரிடர் காலங்களில் குழந்தைக்கு பிரச்சனையின்றி தரக்கூடிய ஒரு உடனடி உணவு தாய்ப்பால் மட்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஊட்டச் சத்துப்பிரச்சினைகள், இரத்தசோகை, நிமோனியா ,வயிற்றுப்போக்கு, பற்சொத்தை ,ஒவ்வாமை ஆகியவை வரும் வாய்ப்பு மிகக் குறைவு.

தாய்ப்பாலில் மிகுந்துள்ள டாரின் மற்றும் டி ஹெச் ஏ காரணமாக குழந்தையின் ஐக்யூ புள்ளிகள் 10 வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தாய்ப்பாலில் உள்ள இரும்புச்சத்து அளவு குறைவாக இருந்தாலும் முழுவதுமாக உறிஞ்சப்படும் லேக்டோபெரின்குடலில் உள்ள கிருமிகளைக் கொன்று எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக தாய்ப்பால் தினம் இன்று !