Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் பிரக்கோலி !!

Webdunia
பிரக்கோலி நார்ச்சத்து நிறைந்தது. எனவே அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது. பிரக்கோலியை வேகவைத்து உண்டால் அது உடலுக்கு  மிகவும் நல்லது. 

பிரக்கோலியை ஆவியில் சமைத்தால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பித்த அமிலங்கள் இணைகின்றன. இந்த இணைப்பினால் பித்த அமிலங்கள்  வெளியேற்றப்பட்டு, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
 
பிரக்கோலியில் மற்ற காய்களைக் காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்து உள்ளன. இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
 
பிரக்கோலி புற்று நோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது. பிரக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு பிரக்கோலி  சரியான மாற்று.
 
பிரக்கோலியை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதனை நீங்கள் குழம்பாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணலாம். சூப், சாலட்  ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். பிரக்கோலி, ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது. 
 
பிரக்கோலி ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி  வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில்  முக்கிய பங்களிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments