கேரட் கீரையில் உயிர்ச்சத்துகள் மிகுதியாக உள்ளன. உடலின் இரத்தத்திலுள்ள நச்சுத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.
கேரட் கீரை முடக்கு வாதத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகும். முடக்கு வாதத்திற்கு உட்பட்டவர்களின் உடலிலுள்ள நோய் பாதிப்புக்கு ஆளாகாத உறுப்புகளை இக்கீரை வலுப் படுத்துகிறது.
இக்கீரையைப் பச்சையாக வாயிலிட்டு மென்று பல்துலக்க பல் ஈறுகள் வலுப்பெறும். இவ்வாறே முதிர்ந்த கீரையின் பூத்த நிலையிலுள்ள தண்டுகளைப் பல் விளக்கும் பல் குச்சியாகப் பயன்படுத்தலாம். இவைகள் பல்லுக்கு வலுவூட்டி பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு, ஈறு வீக்கம் முதலிய நோய்களைக் குணப்படுத்தும்.
இரத்தத்தைப் பெருக்க வைப்பதில் இக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட் கீரை, முள்ளங்கிக் கீரை மற்றும் பீட்ருட் கீரை முதலியன இரத்த விருத்திக்குப் பயன்படுபவைகள். கேரட் கீரை தாதுபலத்தைக் கொடுக்கும்.
உடலின் இரத்தத்திலுள்ள நச்சுத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. இக்கீரையின் கஷாயம் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைக்கும் தன்மையைப் பெற்றது. வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு இந்தக் கேரட் கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.