Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க செய்யும் முந்திரி !!

Webdunia
முந்திரிப் பருப்பில் உள்ள கொழுப்புக்கள் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவற்றைக் கரைத்து மூளையின் செயல்திறன் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது.

இக்கொழுப்பு அமிலங்கள் நிறைவுறாத ஒற்றை மற்றும் பலபடி அமிலங்களை உள்ளடக்கி உள்ளது. இவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் இதய நலத்தையும் பேணுகின்றன.
 
முந்திரி பருப்பில் மிகஅதிகமாக உள்ள காப்பர் சத்தானது இரும்புச்சத்தின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுவதோடு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
 
பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்க கொழுப்புகள் திரண்டு கற்களாக பித்தப்பையில் சேகரமாகின்றன. இவையே பித்தபைக்கற்கள் எனப்படுகின்றன.
 
முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்வது பித்தப்பையில் கற்களின் உருவாக்கத்தைக் குறைக்கிறது.
 
நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க இப்பருப்பில் உள்ள துத்தநாகச் சத்தானது நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, நுண்ணுயிரிகளின் தாக்கத்திலிருந்து  பாதுகாத்து காயங்களை விரைந்து ஆற்றுகிறது.
 
முந்திரிப் பருப்பினை கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும்போது, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பாற்றலலை அதிகரிக்கச் செய்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments