தேங்காய் எண்ணெய் சமையலில் பயன்படுவதன் மூலம் அந்த உணவு சீக்கிரமாக செரிமானம் அடைய உதவியாக இருக்கிறது. பொதுவாக சித்த மருத்துவத்தில் அதிக அளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தபடுகிறது.
தேங்காய் எண்ணெய்யை உணவில் நம் பயன்படுவதன் மூலம் அது கெட்ட கொழுப்புகளை உடம்பில் சேர விடுவதில்லை. மேலும் இது உடம்பில் ஹார்மோன்களின் நிறத்தை அதிகப்படுத்தி தோல்களின் நிறத்தை மாற்றுகிறது.
பிறந்த குழந்தை முதல் பெரியவங்க வரை இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பிறந்த குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் அவங்க சரும மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
குளிர்காலத்தில் நமது சருமம் வறட்சியாக காணப்படும் அப்பொழுது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நமது சருமம் ஈரப்பதமாக காணப்படும்.
தேங்காய் எண்ணெய் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது. ஹார்மோன் நிலை சமநிலையில் வைத்து உடல் பருமனை பாதுகாத்துக் கொள்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
தேங்காய் எண்ணெய்யை நம் முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகம் புத்துணர்வாக இருக்கும். மேலும் தேங்காய் எண்ணெய்க்கு மருத்துவ பலன்களும் உண்டு. மேலும் வறட்சியான தலைமுடி அடிக்கடி கொட்டுதல் முடி உடைதல் போன்ற பிரச்சனைகளை தேங்காய் எண்ணெய் எளிதாக சரி செய்கிறது .
குழந்தைகளுக்கு ஜலதோஷ காலத்தில் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை சூடுசெய்து அந்த எண்ணெய்யை குழந்தைகளின் மார்பு பகுதியில் தடவுவதன் மூலம் நல்ல பயனை அது கொடுக்கும்.