Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

செர்ரி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?

செர்ரி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?
இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.

பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.
 
பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும்  அவசியமான தாதுவாகும்.
 
வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேலும் இதில் ஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. 
 
உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. 
 
ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் !!