Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாச கருடன் கிழங்கு மருத்துவத்தில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா....?

Webdunia
ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். 

ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. 
 
இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்மையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தியுண்டாகும்.
 
கிழங்கு வகைகளில் ஆகாச கருடன் கிழங்கு சற்று வித்தியாசமானது. இக்கிழங்கு கசப்புச் சுவை உடையது. இதில் உயிர்ச்சத்து அதிகம் உள்ளது எனினும் மனிதர்கள் உண்ணப்பயன்படுவதில்லை. மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு உள்ளுக்குள் கொடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
 
இக்கிழங்கை கண்திருஷ்டி தோஷம் நீங்கப் பயன்படுத்துவர். இக்கிழங்கினை வீடு மற்றும் கடை வாசல்களில் கட்டித் தொங்கவிடுவர். இது முளைவிட்டு வளரும். அப்படி வளர்ந்தால் நல்லது. இல்லையெனில் கெடுதல் என்று நம்புகின்றனர். நீர் இல்லாமலேயே இக்கிழங்கு முளைவிட்டு வளரும்.
 
மருத்துவப் பயன்கள்: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும்படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விஷம் முறிந்து நோயாளி குணமடைவான். விஷம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது. பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments