பொடுதலை கீரையை பூற்சாதம், பொறுதலை என்றும் அழைக்கின்றனர். இந்த கீரை வெப்பத்தன்மை கொண்டது.
இந்த கீரையின் இலை, வேர் மிகுந்த மருத்துவ பயன் உடையது. பொடுதலை கீரை துவர்ப்புச் சுவையை கொண்டது.
பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போல போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும். சீயக்காய் மற்றும் கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பொடுதலை இலை முக்கிய இடம் பெறுகிறது.
பொடுதலை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் கஷாயம் போல செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று கோளாறுகள் நீங்கும்.
விரைவீக்கத்தால் பாதிக்கபட்டவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போல போட்டால் விரைவீக்கம் குறையும்.
பொடுதலை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும். பொடுதலை இலையை நெய்விட்டு வதக்கி மிளகு, சீரகம், உப்புச் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.