கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். மேலும் கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொய்யா பழத்தை சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது. உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பினை கரைத்து கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.
கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் அதன் வீரியம் குறைந்து நோய் தாக்கமும் குறையும்.
கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு தீர்ந்து விடும்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் மூளை புத்துணர்ச்சி அடைந்து மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா பழம் பயன்படுகிறது. தைராய்டினால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய கொய்யா பழம் பயன்படுகிறது.