காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நோயே நம்மை நெருங்காது.
இஞ்சியை நன்றாக உலர வைத்தபின், நீர் வற்றிய நிலையில் இருப்பது தான் சுக்கு. இது அவ்வளவு எளிதில் கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து நன்மைகளும் இதில் அடங்கியுள்ளது.
சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.
சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து, அதை நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறியவுடன், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமடையும்.
சுக்கைத் பொடி போல தூள் செய்து, சிறிது எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் தீரும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் கஷாயம் போல செய்து பருகி வந்தால், கடுமையான சளி இருந்தாலும் மூன்று நாட்களில் குணமாகும்.
சுக்கு சிறிது எடுத்து அதை ஒரு வெற்றிலையுடன் சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்குடன் சிறிது நீர் சேர்த்து சிறிது விழுது போல அரைத்து, நெற்றியில் தடவி வந்தால் தலைவலி தீரும்.
சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். சுக்குடன், தனியா வைத்து சேர்த்து அதில் சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து சாப்பிட்டால், அதிக மது அருந்தியதால் ஏற்பட்ட போதை தெளிந்து இயல்பு நிலை உண்டாகும்.