வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த துரியன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உடலுக்கு வலிமை தருகிறது.
துரியன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் உடலில் சேரும் கொழுப்பின் அளவை பராமரிக்கின்றன. இதனால், இதயத்தை பொருத்தமாக வைத்திருக்க முடிகிறது.
துரியனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்சத்துகள் உள்ளன. சருமத்தின் வறட்சியைக் குறைப்பதன் மூலம் சருமத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடுகள் பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது. இது போன்ற சமயங்களில், எலும்புகளை பலப்படுத்த துரியன் பழம் பயனுள்ளதாக அமைகிறது.
துரியன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கதைத் தடுக்கிறது.
துரியன் பழத்தில் பி வைட்டமின்கள், வைட்டமின் சி, தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஃபைபர் உள்ளிட்ட ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. இருந்தாலும் அதன் வாசனை மற்றும் சுவை அனைவருக்கும் பிடிக்காது.