அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு.
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம்.
அத்தி பழத்தில் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும்.
மூலநோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம்.
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.
பெண்கள் தினமும் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊறவைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும்.