கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; நரையும் மாறும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து, அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை ஏழு நாட்களுக்கு கொடுத்தால் மஞ்சள் காமாலை குணமடையும். இதனை சாப்பிடுவது தலைமுடிக்கும், முகப்பொழிவிற்கும் மிக மிக சிறந்தது. வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஆரோக்கியமும் அழகும் மேம்படுகிறது.
கரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்துமிகுந்திருக்கிறது. பல், ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.,முடி நரைக்காது. இரத்தம் சுத்தமடையும்.மது,சிகரெட் நச்சினை உடலில் இருந்து நீக்கும்.
கரிசாலை, சீரகம், தூதுவேளை,முசுமுசுக்கைஆகிய நான்கையும் பொடித்து சூரணமாக்கி முறையே 8: 4: 2 என்ற விகிதத்தில் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து அதில் இந்த சூரணத்தை போட்டு காய்ச்சி ஒரு தம்ளராக சுண்டியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரை, அல்லது பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினந்தோறும் அருந்தி வந்தால் நோய்கள் காணாமல் போகும். உடல் வலுவடையும். எந்த நோயும் அணுகாது.
கரிசலாங்கண்ணி கல்லீரலை உறுதிப்படுத்தும்; வீக்கத்தைக் குறைக்கும்; மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும்; உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
கண் பார்வை தெளிவடைய கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்.
இளநரையை தடுக்க கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலர்த்தி, தூளக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.