Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு குறையுமா...?

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு குறையுமா...?
குழந்தை பிறந்து, முதல் ஒரு மணி நேரத்தில் கொடுக்கபடும் தாய்ப்பால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கிறது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் மிகுந்த நன்மை வாய்ந்தது. தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணிக்கும் உணவாக தாய்ப்பால் உள்ளது.
 
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்காத பெண்களை விட சிசேரியன் செய்யபட்டிருந்தாலும் விரைவாக குணமடைகிறார்கள். பெண்களின் உதிர போக்கை குறைக்கும்.
 
தாய்ப்பால் குழந்தைக்கு அதிகபட்சமாக 3-வயது வரை கொடுக்கலாம். குழந்தையின் புத்திக்கூர்மை, மூளைச் செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக தாய்ப்பால் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மேலும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு முதல் இன்றியமையாத உணவு என்பதை வலியுறுத்தி வருகிறது.
 
தாய்ப்பால் கொடுப்பது,பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பபை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. தாய்மார்களின் கர்பபையை விரைவாக  குணப்படுத்துகிறது. தாய்மார்களின் உடல் எடையை சீராக்கவும் உதவுகிறது.
 
தாய்மார்களின் மன அழுத்தத்தை குறைக்கிறது,மனதளவிலும்,உடலளவிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குழந்தைக்கு மிகுந்த ஆரோக்கியமுடனும், உடல் மற்றும் மனதளவிலும் நல்ல வளர்ச்சியை உருவாக்குகிறது. சிஸ்டின், டாவ்ரின் ஆகிய சத்துக்கள் தாய்ப்பாலில் போன்றவை சரியான அளவில் உள்ளன. மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகமிகக்  குறைவு.
 
குழந்தை மீதான தாய்யின் அரவணைப்பு, குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பது தாய் மற்றும் சேய்க்கு இடையேயான  பிணைப்பும், பந்தமும் அதிகரிக்கிறது. வளரும் குழந்தை மனவளர்ச்சி மற்றும் மற்றவர்களிடமும் அன்போடு நடந்துகொள்ளவும் உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்